Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வீரவநல்லூரில் தமிழக முதல்வர் கலைஞரின் 87வது பிறந்த நாள் விழா

வீரவநல்லூரில் தமிழக முதல்வர் கலைஞரின் 87வது பிறந்த நாள் விழா

வீரவநல்லூரில் தமிழக முதல்வர் கலைஞரின் 87வது பிறந்த நாள் விழா

வீரவநல்லூரில் தமிழக முதல்வர் கலைஞரின் 87வது பிறந்த நாள் விழா

ADDED : ஜூன் 02, 2010 03:39 AM


Google News

வீரவநல்லூர்:வீரநல்லூரில் முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழாவை மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு 25 ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்களையும், 5பேருக்கு கிரைண்டர்களையும் வழங்கினார்.



மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் நெப்போலியன் பேசியதாவது:-வரும் (3ம் தேதி) முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா சென்னையில் நடக்கிறது. அதில் நான் கலந்து கொள்வதால் இங்கு தமிழக முதல்வரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறேன். எதிர்கட்சிகள் பாராட்டும் நிலையில் கலைஞர் சிறப்பாக ஆட்சி செய்கிறார்.



மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர். 6வது முறையும் கலைஞர் தமிழக முதல்வராக வேண்டும். கலைஞர் ஓர் 8வது அதிசயம். நான் என் மகன் தசைத்திறன் குறைவு வைத்தியத்திற்கு இங்கு வந்துள்ளளேன் (கண்ணீர் மல்க) அவன் நிதானமாக இருந்தாலும் நாங்கள் அவன் நிலை கண்டு அழுகிறோம். இவ்வூர் அவனுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்கும் என்று நம்புகிறோம்.எனது மகனுக்கு எந்த மனக்குறையும் இருக்ககூடாது என்பதற்காக அவன் கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்து வருகிறேன். இங்கு மாற்றுத்திறன் சேவை மையம் அமைக்க இடம் பார்த்து வருகிறேன். வீரவநல்லூர் சிறந்த ஊர் இங்கு வாழ்வதை நான் பெரிதும் விரும்புகிறேன். மனிதன் வாழ்கின்ற காலம் குறைவு. அதனால் இருக்கும்போது நாம் நல்லதை செய்வோம். மனிதனின் சராசரி காலம் 60 ஆண்டு. அதில் ஆடி ஓடுவது 20 வருட காலம் இதனையெல்லாம் மனதில் கொண்டு நாம் நல்லதை செய்வோம் இவ்வாறு அவர் பேசினார்.



விழாவில் ராமகிருஷ்ணன், நகர செயலாளர் ரத்தினவேல், டவுன் பஞ்.,தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் பரமசிவஅய்யப்பன், கோபாலசமுத்திரம் புலவர் சண்முகானந்தம், சாரதா வித்யாலயா பள்ளி தலைமையாசிரியர் சிவஞானம், அண்ணா அறக்கட்டளை நிறுவனர் சுப்பையா உட்பட பலர் பேசினர். நிகழ்ச்சியில் நெப்போலியன் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் காந்திபாண்டியன், அமைச்சரின் நேர்முக உதவியாளர் ஜெயராமன், வினோத் மற்றும் பஞ்., கவுன்சிலர்கள் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் கணக்கெடுக்கும் பணியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அம்பை., தாசில்தார் சிவசங்கரன், துணை தாசில்தார் கோட்டூர் சாமி உட்பட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us